/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநில கால்பந்து போட்டி பரிசளிப்பு
/
மாநில கால்பந்து போட்டி பரிசளிப்பு
ADDED : செப் 04, 2024 06:56 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 10,13,15 வயது உட்பட்டோருக்கான மாநில கால்பந்து போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், பார்வதீஸ் அனுக்கிரஹ இன்டர்நேஷனல் பள்ளி ,ஆர்ட் டிரஸ்ட் சாக்கர் பள்ளி இணைந்து டேலண்ட் கோப்பைக்கான மாநில கால்பந்து போட்டிகள் நடத்தின. 10, 13, 15 வயது உட்பட்டவர்களுக்கான இந்த போட்டி அனுக்கிரஹ இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
24 அணிகள் பங்கு பெற்றதில் 10 வயது பிரிவில் மதுரை ஏ.சி.எம்.இ., அணி முதலிடம் , 13 வயது பிரிவில் ஓசூர் ஜஸ்ட் ப்ளே அணி ,15 வயது பிரிவில் மதுரை ஏ.சி.எம்.இ., அணி முதலிடம் பிடித்தன.
இதற்கான பரிசளிப்பு விழா மாவட்ட கால்பந்து கழகசெயலாளர் சண்முகம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ரமேஷ் பட்டேல், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் முதுநிலை மேலாளர் ஹரி பிரசாத், பள்ளி முதல்வர் அனீஸ் பாத்திமா , டைட்டஸ் முன்னிலை வகித்தனர். முதல் 4 இடம் பெற்ற அணிகளுக்கு கோப்பை , மெடல்கள், சான்றிதழ், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆர்ட் டிரஸ்ட் நிறுவனர் டைட்டஸ் , குழுவினர் செய்திருந்தனர்.