/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தெருநாய் தொல்லை; மர்ம நபர்கள் நடமாட்டம்; பழநி 24 வார்டில் தொடரும் அச்சம்
/
தெருநாய் தொல்லை; மர்ம நபர்கள் நடமாட்டம்; பழநி 24 வார்டில் தொடரும் அச்சம்
தெருநாய் தொல்லை; மர்ம நபர்கள் நடமாட்டம்; பழநி 24 வார்டில் தொடரும் அச்சம்
தெருநாய் தொல்லை; மர்ம நபர்கள் நடமாட்டம்; பழநி 24 வார்டில் தொடரும் அச்சம்
ADDED : ஆக 09, 2024 06:42 AM

பழநி : தெருநாய் தொல்லை, மர்ம நபர்கள் நடமாட்டம் என பழநி நகராட்சி 24 வது வார்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காமராஜர் தெரு, பொன்னையன் தெரு, சாராப் லைன்,ராமர் கோயில் தெரு, கலைஞர் தெரு, சேரன் தெரு, மார்க்கண்டேயன் தெரு, நாகூர் மீரான் சந்து உள்ளடக்கிய இந்த வார்டில் குறுகிய சந்துடன் ரோடுகள் உள்ளதால் மக்கள் பாதிக்கின்றனர். நாய் தொல்லை, மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடிநீர் உள்ளிட்ட பிரதான பிரச்னைகளும் இங்கு அதிகம் உள்ளன.
குளத்தை துார்வாரலாமே
அமீர் அம்ஜா, டீக்கடை உரிமையாளர் ,காமராஜர் தெரு: இப்பகுதி காமராஜர் தெரு அருகில் வையாபுரி குளம் உள்ளது. குளத்தில் சாக்கடை கழிவுகள் கலக்கிறது .அமலை செடிகள் அதிகம் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. வையாபுரி குளத்தில் துார்வாருதல் பணிகளை மேற்கொண்டு அமலைச் செடிகளை அப்புறப்படுத்தினால் நகரமும் துாய்மையாக இருக்கும் வார்டும் சுத்தமாக இருக்கும்.
சமூக விரோத செயலால் பீதி
காமால்தீன், அரிசி வியாபாரி : மதினா நகர் வழியே குளத்திற்குள் சமூக விரோத செயலில் ஈடுபடும் மர்ம நபர்கள் செல்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள் அச்சத்துடன் உள்ளனர். இங்கு போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். தவணை முறையில் பணம் செலுத்த உள்ள ஜிகா பைப் லைன் பயனாளிகளுக்கு உடனே இணைப்பு வழங்க வேண்டும் .
இரவில் வரும் குடிநீர்
முகமது யாசின், வீட்டு உபயோகப் பொருள் பழுது நீக்குபவர்: இரவு நேரங்களில்தான் குடிநீர் வருகிறது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் அனைவரும் மிகவும் சிரமம் அடைகின்றனர். அனைத்து பகுதிக்கும் முழுமையாக ஜிகா பைப் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
போலீஸ் ரோந்துக்கு ஏற்பாடு
சாகுல் ஹமீது, கவுன்சிலர் (தி.மு.க.,): குழந்தைகள் மையம், சுகாதார வளாகம் எந்த குறைகளும் இன்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. தினமும் குப்பை அகற்றப்படுகின்றன. கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நாய் தொல்லை அதிகம் உள்ளதால் நகராட்சி சார்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். துார்வார பொதுப்பணி துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பாதாள சாக்கடை அமைக்கப்படும். இதன்மூலம் வையாபுரி குளத்தில் சாக்கடை கலப்பதும் குறையும் என்றார்.