/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செஸ் போட்டியில் சாதித்த மாணவர்கள்
/
செஸ் போட்டியில் சாதித்த மாணவர்கள்
ADDED : ஆக 18, 2024 05:18 AM

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட செஸ் போட்டி 11, 14, 17, 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
11 வயது ஆடவர் பிரிவில் சாரதா வித்யாலயா பள்ளி தக்சின் முதலிடம், லட்சுமி நாராயணா பள்ளி வினை ரதீசன் 2ம் இடம் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் லட்சுமி நாராயணா பள்ளி பவிஷ்ணா முதலிடம், ஸ்கிரன்யா பிரியா இரண்டாம் இடம் பெற்றனர். 14 வயது ஆடவர் பிரிவில் அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாபிஷன் , லோகேஷ் முதல் இரண்டு இடங்களை வென்றனர். பெண்கள் பிரிவில்மகாலட்சுமி பெண்கள் பள்ளி ஷாஷ்மீன் பாத்திமா முதலிடம், அன்னை வேளாங்கண்ணி பள்ளி பிளஸ்சி 2ம் இடம் பெற்றனர்.
17 வயது மாணவர் பிரிவில் தனுஷ் வர்மா அன்னை வேளாங்கண்ணி பள்ளி முதலிடம், மவுண்ட் சீயோன் பள்ளி ஹரிஷ் இரண்டாம் இடம் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் திருச்சிலுவை பள்ளியைச் சேர்ந்த லேகா, ஷப்ரின் பாத்திமா முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.
19 வயது பிரிவில் அன்னை வேளாங்கண்ணி பள்ளி தீபக், கவியரசன் முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.
பெண்கள் பிரிவில் அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவி காருண்யா முதலிடம், திருச்சிலுவை பள்ளி மாணவி திவ்யா ஸ்ரீ இரண்டாம் இடம் பெற்றனர். வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.