ADDED : ஆக 07, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.8
ஆத்துார் கூட்டுறவு கலை அறிவியல் கல்லுாரி கூட்டரங்கில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஸ்ரீராகவ்பாலாஜி தலைமை வகித்து பேசுகையில், ‘புதிதாக விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்த்து குறு விவசாயிகளுக்கு அதிகளவில் பயிர்க்கடன் வழங்க வேண்டும். அனைத்து உரங்களையும் போதிய இருப்பு வைத்து தேவைப்படும் போது வழங்க வேண்டும். இ- சேவை மையங்களில் அனைத்து சேவைகளையும் உடனுக்குடன் செய்து தர வேண்டும் என்றார்.
திண்டுக்கல் சரக துணைப்பதிவாளர் கார்த்திக்கவுதம், கூட்டுறவு சார்பதிவாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் பங்கேற்றனர்.
