UPDATED : அக் 07, 2026 07:26 PM
ADDED : அக் 07, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அருகே செங்குளம் விரிச்சலாறு பகுதியில் தனியார் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிகளவு கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கல்குவாரிகளில் ஆர்.டி.ஓ., பழனிவேல் ஆய்வு செய்தார். அப்போது குவாரிகளுக்கு முறையான உரிமம் பெறப்பட்டுள்ளதா, அரசு அனுமதித்ததை விட அதிக அளவில் வெடிகள் வைக்கப்படுகிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
தாசில்தார் டேனியல் பிரேம்குமார், மண்டல துணை தாசில்தார் காட்டுராஜா உள்ளிட்ட வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
