sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காவிரி குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு; தீர்வுக்கு வழிதான் என்ன

/

காவிரி குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு; தீர்வுக்கு வழிதான் என்ன

காவிரி குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு; தீர்வுக்கு வழிதான் என்ன

காவிரி குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு; தீர்வுக்கு வழிதான் என்ன


ADDED : ஏப் 23, 2024 06:34 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை பாளையத்தில் புதிதாக போடப்படும் மெயின் ரோட்டுக்கு அடியில் காவிரி குடிநீர் குழாய் செல்லும் நிலையில் நேற்று முன்தினம் திடீர் உடைப்பு ஏற்பட்டு கூடுதலான தண்ணீர் பீரிட்டு வெளியேறியது.

காவிரி குடிநீர் குழாய் பாதைக்கு மேலே மெயின் ரோடு அமைப்பதை தவிர்த்து குடிநீர் குழாய் பாதையை சற்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரூர் காவிரியில் இருந்து டி.கூடலுார், பாளையம், குஜிலியம்பாறை, கோவிலுார், வழியாக வேடசந்துார், ஒட்டன்சத்திரம் நகர் பகுதிக்கான காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் திண்டுக்கல் கரூர் மெயின் ரோட்டை ஒட்டி மேல் புறமாக செல்கிறது.

திண்டுக்கல் கரூர் நான்கு வழி சாலை பணியில் டி.கூடலுார், குஜிலியம்பாறை, கோவிலுார் வரை காவிரி குடிநீர் குழாய் பாதையின் மேற்பகுதியில் ரோடு போடப்பட்டுள்ளது.

இதனால் ஆரம்பம் முதலே அடுத்தடுத்து ஆங்காங்கே குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறுவதும், அடைப்பதுமாக உள்ளனர்.

எப்படியாவது ரோடு பணியை முடித்து ஒப்படைத்து விட்டு செல்லலாம் என்ற நோக்கில்தான் பணியும் நடைபெறுகிறது.

இரு நாட்களுக்கு முன்பு குஜிலியம்பாறை பாளையம் ரோட்டின் மையப் பகுதியில் செல்லும் காவிரி குடிநீர் குழாய் அழுத்தம் தாங்காது திடீர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீரிட்டு வெளியேறியது.

இதனால் போக்குவரத்து நேற்று மாலை வரை துண்டிக்கப்பட்டு ஒரே வழித்தடத்தில் போக்கு - வரத்து நடைபெற்றது. தொடர்ந்து காவிரி குடிநீர் குழாய் உடைந்து வரும் நிலையில் மெயின் ரோட்டுக்கு அடியில் செல்லும் குழாயை ரோட்டுக்கும் சற்று அப்பால் தள்ளி குழாய் பாதையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

யார் செப்பனிடுவது


ஆர்.மணிவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், டி.கூடலுார்: கரூரிலிருந்து வேடசந்துார் செல்லும் காவிரி குடிநீர் குழாயின் மேற்பகுதியில் தான் திண்டுக்கல் கரூர் ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் ரோட்டுக்கு அடியில் செல்லும் காவிரி குடிநீர் குழாய் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

புதிதாக ரோடு போடும்போதே இத்தனை முறை உடைப்பு ஏற்படும் நிலையில் பணி முடிந்த பிறகு எத்தனை முறை உடைப்பு ஏற்படுமோ. உடைப்பு ஏற்படும் போது ரோட்டை உடனடியாக யார் செப்பனிடுவது என்ற கேள்வி எழுகிறது.

விபத் துக்கு வாய்ப்பு


பி.ரஞ்சித்குமார், அலைபேசி கடை உரிமையாளர், பாளையம்: மெயின் ரோட்டுக்கு அடியில் காவிரி குடிநீர் குழாய் செல்வதால் தான் இது போன்ற குடிநீர் குழாய் உடைப்புகள் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்லும்போது குடிநீர் குழாய் திடீரென வெடித்தாலும் அதனால் விபத்து அபாயம் ஏற்படலாம். புதிதாக அமைக்கப்படும் ரோடு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்றால் இந்த காவிரி குடிநீர் குழாயை சற்று தள்ளி அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us