ADDED : ஆக 09, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பாறைப்பட்டி எம்.டி.எஸ்.
நகர் பகுதிகளில் சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பகல் நேரங்களில் குறைந்தது 2, 3 முறையாவது மின்தடை ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். அடிக்கடி தொடர் மின்தடை ஏற்படுகிறது. முதியவர்கள், குழந்தைகள துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படுவதால் சீராக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.