/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டுப்பாடுகளை நீட்டித்தால் அவதி; வணிகர் சங்கம் எதிர்ப்பு
/
கட்டுப்பாடுகளை நீட்டித்தால் அவதி; வணிகர் சங்கம் எதிர்ப்பு
கட்டுப்பாடுகளை நீட்டித்தால் அவதி; வணிகர் சங்கம் எதிர்ப்பு
கட்டுப்பாடுகளை நீட்டித்தால் அவதி; வணிகர் சங்கம் எதிர்ப்பு
ADDED : ஏப் 11, 2024 05:53 AM
திண்டுக்கல் : தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகும் கட்டுப்பாடுகள் தொடரும் என்ற தேர்தல் ஆணைய முடிவிற்கு திண்டுக்கல் மாவட்ட வர்த்தகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கிருபாகரன் அறிக்கை : தமிழகத்தில் ஏப். 19 ல் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகும் பணம் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜூன் 4 வரை தொடரும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு திண்டுக்கல் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் வணிகர்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள். கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ள மறுத்தால் கடை அடைப்பு, தேர்தலை புறக்கணிக்க வணிகர்கள்
பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார் .

