sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மரங்கள் வளர்ப்பிற்கு ஆர்வம் காட்டும் சுக்காம்பட்டி ஊராட்சி

/

மரங்கள் வளர்ப்பிற்கு ஆர்வம் காட்டும் சுக்காம்பட்டி ஊராட்சி

மரங்கள் வளர்ப்பிற்கு ஆர்வம் காட்டும் சுக்காம்பட்டி ஊராட்சி

மரங்கள் வளர்ப்பிற்கு ஆர்வம் காட்டும் சுக்காம்பட்டி ஊராட்சி


ADDED : ஜூன் 03, 2024 04:17 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

80,000க்கும் மேலான மரக்கன்றுகளை நடவு செய்து சுக்காம்பட்டி ஊராட்சி பகுதியை பசுமையான பகுதியாக மாற்றும் முயற்சியில் ஊராட்சி நிர்வாகம் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பெய்யும் மழையளவுடன் ஒப்பிடுகையில் வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகாக்களில் மழையளவு குறைவு. இதனால் வேடசந்துார் சட்டசபை தொகுதி சார்ந்த பகுதிகள் எப்போதுமே வறட்சி பாதிக்கும் பகுதியாகவே நீடிக்கிறது.

இங்கு மழை பொழிவு குறைய மரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டதும் முக்கிய காரணமாகும். இப்பகுதியில் அழிக்கப்பட்ட மரங்கள் எண்ணிக்கையை மீண்டும் உருவாக்கும் நடவடிக்கையாக தற்போது அரசு, தனியார் மூலம் பணிகள் நடப்பது மகிழ்ச்சியான விஷயம். இவர்களுள் வடமதுரை ஒன்றியத்தில் சுக்காம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினரின் அர்ப்பணிப்பு உணர்வுடனான பணி மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், பலனை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்முன்னே பார்க்கக்கூடிய சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது.

வடமதுரை ஒன்றியத்தில் கரூர் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது சுக்காம்பட்டி ஊராட்சி. மூன்று பக்கமும் மலைகள் சூழ அமைந்துள்ள இங்கு வளவிசெட்டிபட்டி, குரும்பபட்டி, புதுப்பட்டி, பூசாரிபட்டி, மாமரத்துபட்டி, சுக்காம்பட்டி, அயினாம்பட்டி, ஆலாம்பட்டி, பாலமடைப்பட்டி, பாலம்பூசாரியூர், கரிகாலகவுண்டனுார், ரோட்டுபுதுார், ஒண்டிபொம்மன்பட்டி, யாதவாபுதுார், களத்துார், செக்கணத்துபட்டி குக்கிராமங்கள் உள்ளன.

அனைத்து கிராமங்களிலும் மரங்களை அதிகளவில் நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. இதையடுத்து 2017ல் துவங்கி ஒன்றிய அதிகாரிகள் ஒப்புதலுடன் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணி இங்கு நடக்கிறது. கிராமங்களில் இயற்கையாக இலவசமாக கிடைக்கும் வேம்பு, புளி, நாவல் பழ விதைகளை சேகரித்து அயினாம்பட்டியில் மரக்கன்று உற்பத்திக்காக நர்சரி அமைத்தனர்.

இங்குள்ள கிராமங்கள் அனைத்தும் இருக்கும் அரசு இடங்கள், ரோட்டோரம், சிறுகுன்றுகள் என தற்போது வரை 80,000 க்கு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2020 ஜனவரியில் தலைவராக பொறுப்பேற்ற முனியப்பனும் மர வளர்ப்பிற்கு ஆர்வம் காட்டி வருவதால் மர வளர்ப்பு பணி தொய்வின்றி செல்கிறது. இவ்வாறு நடப்பட்ட கன்றுகளில் பாதியளவிற்கு வளர்ந்த மரங்களாக உருமாறியுள்ளது.

சுற்றுச்சூழல் மேம்படும்


வி.முனியப்பன், ஊராட்சித்தலைவர், சுக்காம்பட்டி: வடமதுரை ஒன்றியத்தில் மக்கள்தொகை அதிகம் கொண்ட ஊராட்சியான இங்கு விவசாயமே பிரதானம் என்பதால் வரி வருமானம் குறைவு.

தற்போது வளர்க்கப்படும் மரங்கள் மூலம் எதிர்காலத்தில் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையிலும், மழை வளத்தை அதிகரிக்கும் நோக்கிலும் அதிகளவில் மரங்களை வளர்ப்பதில் தீவிரமாக உள்ளோம். இதற்காக மகாத்மாகாந்தி ஊரக வேலையுறுதி திட்ட தொழிலாளர்களை அதிகளவில் ஆர்வத்துடன் பணி செய்கின்றனர். மொத்தமாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள இடங்களிலும், தனி கன்றுகள் நடப்பட்ட இடங்களிலும் வேலி அமைத்து பாதுகாத்து வளர்க்கிறோம். ஒரு பகுதிக்கு மழை பொழிவு தடையின்றி கிடைக்க மரங்களை எண்ணிக்கை அதிகம் இருக்க வேண்டும். மரங்கள் அதிகரிக்கும்போது மழை வளம் அதிகரிக்கும். சுற்றுச்சூழலும் மேம்படும்.

ஆக்ஸிஜன் அதிகரிக்கும்


ஆர்.குமரவேல், ஊராட்சி செயலாளர், சுக்காம்பட்டி: மரக்கன்றுகள் நடவு செய்த இடங்களில் வளராமல் பட்டுபோன கன்றுகளுக்கு மாற்றாக ஓரளவு வளர்ந்த மரக்கன்றுகளை நர்சரியிலிருந்து பெற்று நட்டு பராமரிக்கிறோம். ஒரு மரக்கன்று முதல் 3 ஆண்டுகளுக்கு பராமரித்து வளர்த்துவிட்டாலே போதும். பின்னர் அது தானாகவே வளர்ந்துவிடும்.

மனிதன் கழிவாக வெளியேற்று கார்பன்-டை- ஆக்சைடு வாயுவை மரங்கள் எடுத்து கொண்டும் மனிதன் உயிர் வாழ தேவையான ஆக்சிஸனை வழங்குகின்றன. உலகில் மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு மழை முக்கியம். அதை வழங்கும் சக்தி மரங்களிடம் உள்ளது என்பதை அனைவரும் உணர்ந்தாலே போதும்.






      Dinamalar
      Follow us