ADDED : மே 16, 2024 05:42 AM

சாணார்பட்டி : திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக 12 வயது முதல் 20 வயது உட்பட்ட மாணவர்களுக்கான் கோடைகால தடகள பயிற்சி முகாம் மே 1 முதல் மே15 வரை நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழா ஜி.டி.என்., கலைக்கல்லுாரியில் நடந்தது. 53 வீரர் , வீராங்கனைகள் கலந்த கொண்டனர்.
பயிற்சி முகாமானது திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக்கல்லுாரி பயிற்றுனர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.
எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன், மாவட்ட கால்பந்தாட்ட சங்க செயலர் சண்முகம், மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அதிகாரி சிவக்குமார், ஜி.டி.என்.கல்லுாரி முதல்வர் சரவணன் வீரர்களுக்கு சீருடை , சான்றிதழ்களை வழங்கினர். ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தலைவர் துரை, செயலாளர் சிவக்குமார் செய்திருந்தனர்.