ADDED : மே 05, 2024 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் கோடைகால சிறப்பு முகாம் செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம் தலைமையில் நடந்தது. ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி வரவேற்றார். செயின் ஜோசப் மருத்துவமனை மருத்துவர் ரமேஷ் கிருஷ்ணா, பி.ஆர்.ஓ., பவீன், முதன்மை முதல்வர் சந்திரசேகரன் பேசினர்.
மாணவர்களுக்கு நீச்சல், யோகா, தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கைப்பந்து, கால்பந்து, கோகோ, வில்வித்தை, சிலம்பம், செஸ், நடனம், ஆங்கிலம் பேசுதல், இசை உட்பட 24 வகை விளையாட்டுக்கள் பயிற்சி அளிக்கப் பட்டது. பங்கேற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்க பட்டது.
விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மேலாளர்கள் பிரபாகரன், கார்த்திக், ஜான் கிறிஸ்டோபர், ராஜசேகர், பிரபு செய்திருந்தனர்.