/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சூப்பர் லீக் கிரிக்கெட்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன்
/
சூப்பர் லீக் கிரிக்கெட்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன்
சூப்பர் லீக் கிரிக்கெட்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன்
சூப்பர் லீக் கிரிக்கெட்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன்
ADDED : ஜூன் 27, 2024 05:02 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய முதலாவது டிவிஷன் சூப்பர் லீக் போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்த விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பையை வென்றது.2 வெற்றி, 9 புள்ளிகளுடன் ஹரிவர்னா அணி 2ம் இடம் பிடித்தது.
என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் -டி.டி.சி.ஏ.கிரிக்கெட் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ரன்கள் எடுத்தது. பூபதி வைஷ்ண குமார் 26, சச்சின் 25 ரன்களும், ராம்திலக், ஜெயந்த் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 20.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியின் சிவமுருகன் 58 (நாட் அவுட்), பாலசுப்பிரமணி 29 ரன்கள் எடுத்தனர்.
மற்றொரு சூப்பர் லீக் போட்டியில் கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் எடுத்தது. வினோத்குமார் 37 (நாட் அவுட்) ரன்களும், முகமது அப்துல்லா 4 விக்கெட்டுகளும் எடுத்தார். சேசிங் செய்த திண்டுக்கல் ஹரிவர்மா கிரிக்கெட் கிளப் அணி 23.4 ஓவர்களில் விக்கெட்களை இழந்து 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அரவிந்த் 37, கிேஷார் குமார் 31 ரன்கள் எடுத்தனர்.