ADDED : ஆக 16, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தொழிலாளர் துறை உதவி ஆணையர் மலர்கொடி , துணை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் சுதந்திர தின விடுமுறை நாளான நேற்று திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை, உணவு, மோட்டார் போக்குவரத்து உள்ளிட்ட நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
மொத்தம் 84 இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 24 கடைகள், 30 உணவகங்கள் என 54 இடங்களில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராத அறிவிப்பு வழங்கப்பட்டது.
தேசிய விடுமுறை தினங்களில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி இரட்டிப்பு சம்பளமோ,மாற்று விடுப்போ வழங்காமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்படட்டது.

