/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நில அளவீடுக்கு ரூ.7000 லஞ்சம் சர்வேயர் கைது
/
நில அளவீடுக்கு ரூ.7000 லஞ்சம் சர்வேயர் கைது
ADDED : ஆக 01, 2024 10:54 PM

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பரளிபுதுார் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ராஜசேகர், 68. இவரது குடும்பத்தின் பூர்வீக சொத்தான 1.17 ஏக்கர் நிலம் வடமதுரை அருகே வேல்வார்கோட்டையில் உள்ளது. சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்ட நிலையில் ராஜசேகர் தன் நிலத்திற்கு பட்டா கேட்டு 'ஆன்லைன்' வாயிலாக ஜூலை 12ல் விண்ணப்பித்தார். நில அளவீடு பணிக்காக தென்னம்பட்டியை சேர்ந்த சர்வேயர் சுப்பிரமணி, 59, என்பவருக்கு இந்த விண்ணப்பம் வந்தது.
இதற்காக சுப்பிரமணி 7,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத ராஜசேகர் இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனைப்படி நேற்று மதியம் வடமதுரையில் ஹோட்டல் முன் வைத்து 7,000 ரூபாயை, சுப்பிரமணி வாங்கியபோது, அவரை போலீசார் கைது செய்தனர்.