ADDED : ஜூன் 15, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி : கசவனம்பட்டி பூங்காணியம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா சாட்டுதலுடன் துவங்கிய நிலையில் அம்மன் கண் திறப்பு, சுவாமி அழைப்பு ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, முளைப்பாரி, பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
மஞ்சள் நீராடலுடன் சுவாமி கங்கை புறப்பாடு நடந்தது. வாணவேடிக்கையுடன் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.--