ADDED : ஜூன் 25, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம், ஜூன் 26-
சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு குருநாதநாயக்கனுார் அருகே மங்களப்புள்ளி லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பிருந்தாவன தோப்பு லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் வேணுகோபால சுவாமிக்கு பன்னீர், சந்தனம், கரும்புச்சாறு, பால், தயிர், தேன் உள்பட 16 வகை திரவிய அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
