தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி கோயிலில் பக்தரிடம் லஞ்சம் வாங்கிய காவலாளி 'டிஸ்மிஸ்'

 பழநி கோயிலில் பக்தரிடம் லஞ்சம் வாங்கிய காவலாளி 'டிஸ்மிஸ்'

 பழநி கோயிலில் பக்தரிடம் லஞ்சம் வாங்கிய காவலாளி 'டிஸ்மிஸ்'


ADDED : ஜூன் 25, 2026 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்குள்ள ரோப்கார் மையத்தில் காவலாளியாக பணிபுரிந்தவர் முத்து 40. இவரை சில நாட்களுக்கு முன் அணுகிய ஒரு குடும்பத்தினர் முன்னுரிமை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டனர்.

இதற்காக அவர்களிடம் ரூ.3000 லஞ்சம் பெற்ற முத்து, கோயில் அதிகாரி அனுமதியின்றி முன்னுரிமை அடிப்படையில் தரிசனம் செய்ய அனுப்பி வைத்தார்.

இதையறிந்த கோயில் நிர்வாகம் காவலாளி முத்துவை டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் அவர் பணிபுரிந்து வந்த செக்யூரிட்டி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us