/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் சந்தையில் புளி விலை சரிவு
/
ஒட்டன்சத்திரம் சந்தையில் புளி விலை சரிவு
ADDED : மே 10, 2024 05:43 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சந்தையில் புளி விலை சரிவடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி புளி சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடக்கிறது. சிறுமலை, வடகாடு, நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, அய்யலுார், வடமதுரை, எரியோடு,சுற்றியுள்ள பகுதிகளில் விளைந்த புளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த சந்தையில் ஒரு ஆண்டிற்கு தேவையான புளியை வாங்கிச் செல்வது வழக்கம். கடந்த ஆண்டு 10 கிலோ கொண்ட புளி ரூ.1000 வரை விற்றது. இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் புளி வரத்து குறைந்தது. இருந்த போதிலும் மக்கள் புளி வாங்க அதிக ஆர்வம் காட்டாததால் வரத்து குறைந்திருந்த போதிலும் விலை ஏற்றமடையவில்லை. 10 கிலோ புளி ரூ.700க்கு விற்றது. எதிர்பார்ப்புக்கு மாறாக புளி விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.