/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வியூக வகுப்பாளரை நம்பாமல் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்: விஜய்க்கு தமிழருவி மணியன் அறிவுரை
/
வியூக வகுப்பாளரை நம்பாமல் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்: விஜய்க்கு தமிழருவி மணியன் அறிவுரை
வியூக வகுப்பாளரை நம்பாமல் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்: விஜய்க்கு தமிழருவி மணியன் அறிவுரை
வியூக வகுப்பாளரை நம்பாமல் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்: விஜய்க்கு தமிழருவி மணியன் அறிவுரை
ADDED : மார் 03, 2025 06:53 AM

சின்னாளபட்டி, : ''வியூக வகுப்பாளரை நம்பாமல் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள விஜய் முன்வர வேண்டும்''என, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் சி.பி.எஸ்.இ., தரத்திலான கல்வி, ஏழை குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. திராவிட மாடல் ஆட்சி நடத்துவோர், திராவிட மொழிகளில் ஒன்றையாவது 3வது மொழியாக பயிற்றுவிக்கலாம். இரு மொழிக் கொள்கையில் தவறில்லை. மொழிக்காக போராட்டம் நடத்திய ஒரே மாநிலம் தமிழகம். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தாய் மொழியை தவிர்க்க முடியாது. தமிழே படிக்காமல் பட்டதாரியாக முடியும் என்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது. காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி வைத்திருக்கிறது.
மாநில பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றியவர் முன்னாள் பிரதமர் இந்திரா. கல்வி மாநில பட்டியலில் இருந்திருந்தால் நீட் தேர்வை நீக்கி இருக்க முடியும். 14 ஆண்டு காலம் மத்திய அரசில் தொடர்ந்து அங்கம் வகித்த தி.மு.க., அதற்கு ஏன் முயற்சிக்கவில்லை. தென் இந்திய மாநிலங்களில் முதல்வர்களை ஒருங்கிணைத்து கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாற்றுவதற்கான முயற்சியை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். தொகுதி மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமின்றி பதிவு செய்யப்பட்ட கட்சிகளையும் அழைத்தனர். நடிகர் கமலுக்காகவே இந்த மாற்றத்தை தி.மு.க., செய்திருக்கிறது.
தமிழகத்தில் கனிமவள கொள்ளை உட்பட ஊழலில் திளைத்த கட்சியாக உள்ளது. வியூக வகுப்பாளரை நம்பி அரசியல் செய்வதை தவிர்த்து மக்களை சந்தித்து உணர்வுகளை புரிந்து கொள்ள விஜய் முன் வர வேண்டும். 2026 தேர்தலில் எங்கள் இயக்க நிலைப்பாடு குறித்து, சூழலை பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றார்.