ADDED : மார் 28, 2024 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஊடங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அருகே இந்தக் குழுவிற்கான அறை ஒதுக்கப்பட்டுள்ளது. 10 க்கு மேற்பட்டோர் அனைத்து ஊடகங்களையும் கண்காணித்து வருகின்றனர். விதிமீறல் நடப்பது தெரிந்தால் உதவி தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். இந்த பணியினை செய்தி மக்கள் தொடர்பு துறையினர் செய்து வருகின்றனர்.

