/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி
/
ஓட்டு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி
ஓட்டு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி
ஓட்டு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி
ADDED : ஏப் 11, 2024 05:57 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் சட்டசபை தொகுதி வாரியாக அந்தந்த இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் , சின்னம் பொருத்தும் பணிகள் நேற்றும் இன்றும் நடக்கும் நிலையில் ,மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி இயந்திரங்களை தயார் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.
ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரத்தில் வரிசை எண், வேட்பாளர்கள் பெயர் ,சின்னம் ஆகியவை பொறியாளர்கள் உதவியுடன் தயார் செய்யப்படுகிறது.
ஓட்டுப்பதிவு உறுதி செய்யும் இயந்திரத்தை கட்டுப்பாட்டு கருவியுடனும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை - உறுதி செய்யும் இயந்திரத்துடனும் இணைக்கப்படுகிறது. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஓட்டு என மாதிரி ஓட்டுப்பதிவும் நடத்தப்படுகிறது.உறுதி செய்யும் இயந்திரத்தில்துண்டுச்சீட்டுகள் சரிவர பதிவாகிறதா என்பது சரிபார்க்கப்பட்டு தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.இது அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.பார்வையற்ற வாக்காளர்களுக்கு வசதியாக ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து அறிந்துகொள்ளும் வகையில் பிரெய்லி முறை வசதி அமைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உறுதி செய்யும் இயந்திரங்களில் செய்யப்படும் அனைத்து முத்திரைகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர் அல்லது முகவர்களின் கையொப்பம் இடம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஷேக் முகையதீன் முன்னிலையில் நடந்த இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பால்பாண்டி, தாசில்தார் சசி, துணை தாசில்தார் ஜெகதீஸ்வரன் உடன் இருந்தனர்.

