ADDED : ஏப் 10, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : ஏப். 19 ல் நடக்கும் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி மாவட்டத்தில் மதுபானம் உரிமம் பெற்று இயங்கி வரும் டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் உட்பட அனைத்து கூடங்களும் ஏப். 17 முதல் ஏப். 19 வரை 3 நாட்களும், ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 2 முதல் 4 வரை மூடப்பட்டிருக்கும்.
அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

