/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
' கொடை' பூண்டி குளத்தில் படகு கவிழ்ந்து வாலிபர் பலி
/
' கொடை' பூண்டி குளத்தில் படகு கவிழ்ந்து வாலிபர் பலி
' கொடை' பூண்டி குளத்தில் படகு கவிழ்ந்து வாலிபர் பலி
' கொடை' பூண்டி குளத்தில் படகு கவிழ்ந்து வாலிபர் பலி
ADDED : ஜூன் 01, 2024 05:43 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் அனுமதியின்றி படகு இயக்கியதில் வாலிபர் பலியானார்.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவது வாடிக்கையாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி படகு இயக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டிய கொடைக்கானல் சர்வதேச பள்ளியில் பணியாற்றும் மூவர் படகில் சென்ற போது கொடைக்கானல் பாக்கியபுரத்தை சேர்ந்த ஐசக்அருண் 39, படகிலிருந்து தவறி விழுந்து இறந்தார்.
கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதியின்றி படகு இயக்கியது சர்ச்சைக்கு உள்ளாக்கி உள்ளது.
இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.