/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிவீதியில் மதில் சுவரை உடைத்த கோயில் ஊழியர்கள்: தடுத்த நகராட்சி
/
கிரிவீதியில் மதில் சுவரை உடைத்த கோயில் ஊழியர்கள்: தடுத்த நகராட்சி
கிரிவீதியில் மதில் சுவரை உடைத்த கோயில் ஊழியர்கள்: தடுத்த நகராட்சி
கிரிவீதியில் மதில் சுவரை உடைத்த கோயில் ஊழியர்கள்: தடுத்த நகராட்சி
ADDED : மார் 11, 2025 05:27 AM

பழநி: பழநி கிரி வீதியில் உள்ள நீரேற்று நிலையத்தின் அருகே உள்ள சுற்று சுவரை இடித்த கோயில் ஊழியர்களை நகராட்சியினர் தடுத்தனர்
பழநியில் 1937 ல் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் விநியோக அமைப்பு புவியீர்ப்பு விசையில் செயல்பட்டு வருகிறது. புளிய மரத்து செட் பகுதியில் உள்ள நகராட்சி குடிநீர் நீர்த்தேக்கத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிற்கு புவிஈர்ப்பு விசையின் மூலம் பழநி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்திற்கு எந்த வித மோட்டார் வசதியும் இன்றி செயல்பட்டு வருகிறது.
அதே போல் நீரேற்று நிலையத்திலிருந்து புவியீர்ப்பு விசையின் மூலம் பழநி நகரில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த அமைப்பு 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
தற்போது வரை பழநி நகர் முழுமைக்கும் இந்த அமைப்பின் மூலமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோயில் நிர்வாகம் மலையை சுற்றி உள்ள கிரி வீதி பகுதியில் சுற்றுச்சுவர் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
நகராட்சி குடிநீர் நீரேற்று நிலையத்தின் அருகே உள்ள மதில் சுவரை கனரக இயந்திரம் மூலம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் இடித்தனர். நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் வந்த கவுன்சிலர்கள் இதை தடுத்தனர். ஆர்.டி.ஓ., ,மாவட்ட நிர்வாகத்திடம் நகராட்சி சார்பில் புகார் அளித்தனர்.
நகராட்சி தலைவர் கூறுகையில், பழநி நகரில் வாழும் 80 ஆயிரம் மக்களுக்கும் குடிநீர் வசதி இத்திட்டத்தின் மூலமே கிடைத்து வருகிறது.
பழமை வாய்ந்த குடிநீர் விநியோக அமைப்பை பாதுகாத்து வருகிறோம். குடிநீர் தொட்டி உள்ள இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
இங்கு பணிபுரிவதாக இருந்தால் நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். எந்தவித அனுமதி இல்லாமல் சுவரை இடித்தனர்.
இதன் மூலம் குடிநீர் குழாய் உடைப்படுவதை தடுத்து நிறுத்தி உள்ளோம். இதே தொழில்நுட்பத்தில் புதிய குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 800 மீட்டர் குழாய் அமைக்க கோயில் நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்காமல் உள்ளது ''என்றார்.