ADDED : ஏப் 24, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் வத்திபட்டியை சேர்ந்தவர் சுந்தரம் 48. இவரது மகன் முத்துப்பாண்டி 13.
இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார். இந்நிலையில் நேற்று மதியம் பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த முத்துப்பாண்டி,தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது முத்துப்பாண்டி தண்ணீரில் மூழ்கினார். ஒரு மணி நேரத்திற்கு பின் முத்துப்பாண்டி, பிணமாக மீட்கப்பட்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

