/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழை நீர் தேக்கத்தால் பயணிகளை பரிதவிக்கவிடும் பஸ் ஸ்டாண்ட்
/
மழை நீர் தேக்கத்தால் பயணிகளை பரிதவிக்கவிடும் பஸ் ஸ்டாண்ட்
மழை நீர் தேக்கத்தால் பயணிகளை பரிதவிக்கவிடும் பஸ் ஸ்டாண்ட்
மழை நீர் தேக்கத்தால் பயணிகளை பரிதவிக்கவிடும் பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஏப் 13, 2024 02:43 AM

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் முறையான பராமரிப்பு இல்லாததால் அங்கும் இங்கும் மேடு பள்ளங்களாக உள்ளது.
நேற்று பெய்த கோடை மழையால் குளம்போல் நீர் தேங்கியது. ஏற்கனவே இங்கு கூரை இல்லாமல் பயணிகள் அருகிலிருக்கும் கடைகளில் தஞ்சம் புகும் நிலையில்,நடந்து செல்லும் வழியிலும் உள்ள பள்ளங்களில் தேங்கிய மழைநீரால் மக்கள் தொடர் அவதியை சந்தித்து வருகின்றனர். இதைத்தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் மவுனம் காக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதோடு மழைநீர் தேங்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
...........