/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இன்றுடன் ஓய்கிறது பிரசாரம் தொடங்கியது பணப்பட்டுவாடா
/
இன்றுடன் ஓய்கிறது பிரசாரம் தொடங்கியது பணப்பட்டுவாடா
இன்றுடன் ஓய்கிறது பிரசாரம் தொடங்கியது பணப்பட்டுவாடா
இன்றுடன் ஓய்கிறது பிரசாரம் தொடங்கியது பணப்பட்டுவாடா
ADDED : ஏப் 17, 2024 05:17 AM
திண்டுக்கல் : லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைவதால் இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பு பணியை வேட்பாளர்கள் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், சிலரால் கடைசி ஆயுதமான பணம் விநியோகமும் தொடங்கி விட்டது.
லோக்சபா தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்களும் பம்பரமாக சுழன்று சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதன் பிரசாரம் இன்று மாலை 6:00 மணியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் தங்களது இறுதிகட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திறந்த வேனில் கும்பிடுபோட்டபடி நகரம், கிராமங்களில் தொண்டர்கள் பைக் ஊர்வலத்துடன் ஆதரவு திரட்டுவதில் வேட்பாளர்கள் கவனத்தை திருப்பி உள்ளனர்.
பிரசாரம் நிறைவடையும் நாளான இன்று வாக்காளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் வைக்கவும் ஸ்கிரிப்ட்களை தயாராக்கி வைத்துள்ளர் . திண்டுக்கல்லைப் பொறுத்தவரையில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மா.கம்யூ., அ.தி.மு.க., பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சி பிரதானமாக உள்ளன. இந்நிலையில் கடைசி ஆயுதமான பணப்பட்டுவாடாவையும் சிலர் தொடங்கி விட்டனர். ஏரியாக்களுக்கு தகுந்தவாறு விநியோகம் நடக்கிறது.
கிராமப்பகுதிகளில் அதிகாலையிலே இதற்கான பணிகள் நடக்கின்றன. நகர் பகுதிகளில் மதிய நேரங்களில் வீடு, வீடாக சென்று சத்தமில்லாமல் விநியோகம் நடக்கிறது.
பறக்கும் படையோ புறநகர் பகுதிகளில் செல்லும் அப்பாவி வியாபாரிகள், நகைக்கடைக்கு செல்லும் வண்டிகளை பிடித்து வீரத்தை காட்டி வருகின்றனர்.இதை கண்டுபிடிப்பதில் எந்த ஆர்வமும் இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

