/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு ஊழியர், ஆசிரியர் ஏற்கும் ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவிப்பார்: சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி

ADDED : மார் 05, 2025 12:33 AM

திண்டுக்கல் : ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்,'' என, திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி கூறினார்.
அவர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மழையால் பாதிப்படைந்த பயிர்களுக்கான நிவாரணம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாவட்ட முழுவதும் 384 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
விவசாயிகளின் வங்கி கணக்குகளிலும் நிவாரணத் தொகை செலுத்தப்பட உள்ளது.
தமிழக அரசு மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
அவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஓய்வுதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்றார்.