sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பந்தாடப்பட்ட தெருக்கள்; குறுகலான சாக்கடைகள் பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 9வது வார்டு

/

பந்தாடப்பட்ட தெருக்கள்; குறுகலான சாக்கடைகள் பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 9வது வார்டு

பந்தாடப்பட்ட தெருக்கள்; குறுகலான சாக்கடைகள் பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 9வது வார்டு

பந்தாடப்பட்ட தெருக்கள்; குறுகலான சாக்கடைகள் பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 9வது வார்டு


ADDED : ஆக 24, 2024 04:26 AM

Google News

ADDED : ஆக 24, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: குறுகலான சாக்கடை, குழாய் அமைக்கும் பணிகளுக்காக பந்தாடப்பட்ட தெருக்கள் என ஒட்டன்சத்திரம் நகராட்சி 9 வது வார்டில் பிரச்னைகள் ஏராளம் உள்ளன.

தும்மிச்சம்பட்டி என பல தெருக்களை கொண்ட இந்த வார்டில் குடிதண்ணீர் பிரச்னை இல்லை. குடிதண்ணீர் தவிர்த்து பிற தேவைகளுக்கு போர்வெல் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல தெருக்களில் சாக்கடை குறுகலாக இருப்பதால் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. சாக்கடையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கொட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பல இடங்களில் சாக்கடை துார் வாராப்படாமல் உள்ளது. இவற்றை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சியின் குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் குப்பை தேங்குவதில்லை. இருந்த போதிலும் குப்பை வாங்கிச் சென்ற அடுத்த நாள் வரும் வரை காத்திருக்க முடியாமல் குப்பையை காலி இடத்தில் கொட்டுகின்றனர். பழுதான தெருவிளக்குகள் உடனடியாக மாற்றப்பட்டு எரிகிறது. சாக்கடை மிகவும் குறுகலாக உள்ளதால் கழிவு நீர் தேங்குகிறது. இதனை அகலமாக வேண்டும். தெருவில் அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும். பல இடங்களில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக பெயர்த்து எடுக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் தெருக்களில் குவிந்துள்ளதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது. சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்பது வார்டு மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

குடிநீர் பிரச்னை இல்லை


கிருஷ்ணசாமி, வாட்ச்மேன்: தெரு விளக்குகள் எரிகின்றன. குடிநீர் குறிப்பிட்ட இடைவெளியில் சீராக விநியோகம் செய்யப்படுவதால் வார்டில் குடிநீர் பிரச்னை இல்லை. வீடுகளுக்கு வந்து குப்பை சேகரித்து செல்கின்றனர். சாக்கடை குறுகலாக இருப்பதால் அடிக்கடி கழிவு நீர் தேங்குகிறது. இதனை அகலப்படுத்த வேண்டும். தெருக்களுக்கு புதிதாக ரோடு போட வேண்டும்.

பேவர் பிளாக் கற்களால் சிரமம்


கே.தனலட்சுமி, பா.ஜ., செயற்குழு உறுப்பினர்: கழிவு நீர் தேங்காமல் செல்லும் வகையில் சாக்கடை வசதியை மேம்படுத்தவேண்டும். சாக்கடைகள் புதர் மண்டி கிடப்பதால் அடிக்கடி துார்வாரி சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும். தெருக்களில் போடப்பட்ட பேவர் பிளாக் கற்கள் பல இடங்களில் பெயர்ந்துள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். வீடுகளில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் குப்பை வாங்க வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்


தேவி, கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டில் பல பணிகளை செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டில் உள்ள தெருக்களில் புதிதாக சிமென்ட் ரோடுகள் அமைக்கப்பட உள்ளது. பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஐந்து குழாய் அருகில் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு போர்வெல் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அனைத்து இடங்களிலும் புதிதாக சாக்கடை அமைக்கப்பட்டு புதிய ரோடுகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தும்மிச்சம்பட்டி வடக்கு பகுதியில் உள்ள தரைமேல் தொட்டிக்கு குழாய்கள் அமைத்து போர்வெல் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. குப்பைஅகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்படும். குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிந்தவுடன் பேவர் பிளாக் ரோடுகள் சீரமைக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us