/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிறைவு பெற்ற அக்னி நட்சத்திரம் வெயிலுக்கு மத்தியில் குளிர்வித்த மழை

ADDED : மே 30, 2024 04:07 AM
திண்டுக்கல்: நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்ததையொட்டி கோயில்களில் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. இடைப்பட்ட 25 நாட்களில் மழை குளிர்வித்தநிலையில் மாவட்டத்தில் 7 முறை 100 மி.மீ., மேல் மழை பதிவாகியிருந்தது குறிப்பிடதக்கது .
திண்டுக்கல் மாவட்டத்தில் மார்ச், ஏப்.,ல் வெயில் வாட்டி வதைத்தது. தினமும் 100 டிகிரி வெயில் பதிவானது. அதே நேரத்தில் மே 4 முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியது.
இதனால், வெயிலின் தாக்கம் அதிகமாகும் என்ற நிலை இருந்தாலும் மழையால் எதிர்பாராத விதமாக கோடை வெயில் முற்றிலுமாக நிலையை மாற்றியது.
மே 4 ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் முடிந்து நேற்றோடு நிறைவு பெற்றதை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சுவாமிக்கு இளநீர் அபிேஷகம் நடந்தது.
இடைப்பட்ட நாட்களில் வெயிலின் தாக்கம் காலையில் இருந்தாலும் மதியத்திற்கு மேல் தினமும் மழை பெய்தது. அதன்படி மே 5 முதலே பெய்யத் தொடங்கிய மழை மே 25 வரை இடைவிடாது அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது.