/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோட்டை சீரமைத்த மாநகராட்சி
/
சேதமான ரோட்டை சீரமைத்த மாநகராட்சி
ADDED : மே 31, 2024 05:58 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகில் சேதமான ரோடு தினமலர் செய்தி எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகளால் சீரமைக்கப்பட்டது.
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகில் ரோடுகள் சேதமாகி மழைநீரும் தேங்கி வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தியது. இரவு நேரங்களில் மக்கள் தடுமாறி விழும் நிலை தொடர்ந்தது.இதனால் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சேதமான ரோட்டின் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அகற்றி ரோடு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து இங்கு புதிய ரோடுகள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.