ADDED : ஆக 18, 2024 05:18 AM
திண்டுக்கல் : நிலப் பிரச்னை காரணமாக கன்னிவாடி அடுத்த ஆலத்துாரான்பட்டியை சேர்ந்த தம்பதியர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்றனர்.
ஆலத்துாரான்பட்டியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி 42. இவர், பெற்றோர் பொன்னுச்சாமி - பொன்னம்மாள் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்கவந்தார்.
நுழைவுவாயில் பகுதியில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி பொன்னுச்சாமி தம்பதியர் தீக்குளிக்க முயன்றனர்.பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து விசாரித்தனர்.
காளீஸ்வரி கூறியதாவது: ஆலத்தூரான்பட்டியில் எங்களுக்கு 1.5 சென்ட் நிலம் உள்ளது. அந்த இடத்துக்கு அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தையும் பயன்படுத்தி வந்தோம்.
இதனிடையே எங்கள் உறவினர்கள் அந்த நிலத்தை பயன்படுத்துவதற்கு இடையூறு செய்கின்றனர்.
அளவீடு செய்ய வந்த நில அளவைத் துறையினரையும் தடுக்கின்றனர். எங்கள் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய முறையில் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.