/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் முடங்கிய ஆக்கிரமிப்பு அகற்றம்; 7 மாதத்தை கடந்தும் நெடுஞ்சாலைத்துறை அசட்டை
/
கொடைக்கானலில் முடங்கிய ஆக்கிரமிப்பு அகற்றம்; 7 மாதத்தை கடந்தும் நெடுஞ்சாலைத்துறை அசட்டை
கொடைக்கானலில் முடங்கிய ஆக்கிரமிப்பு அகற்றம்; 7 மாதத்தை கடந்தும் நெடுஞ்சாலைத்துறை அசட்டை
கொடைக்கானலில் முடங்கிய ஆக்கிரமிப்பு அகற்றம்; 7 மாதத்தை கடந்தும் நெடுஞ்சாலைத்துறை அசட்டை
ADDED : மார் 08, 2025 06:20 AM

கொடைக்கானல்: கிராமங்களில் ஆக்கிரமிப்பு அகற்றுதலில் முனைப்பு காட்டும் நெடுஞ்சாலைத்துறை கொடைக்கானலில் 7 மாதத்தை கடந்தும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் ரோட்டோரம் உள்ள ஆக்கிரப்புகளை நீதிமன்ற உத்தரவுபடி செப்.25 ல் நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. முதற்கட்டமாக ஏரிச்சாலை சந்திப்பில் இருந்து மூஞ்சிக்கல் வரை தற்காலிக கடைகள் அகற்றம் செய்யப்பட்டன. வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியில் ரோட்டோர கடைகளும் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றுதலில் பிரச்னை உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை கூறுகிறது. வருவாய் துறையினரோ அளவீடு செய்து கொடுத்து விட்டதாக கூறுகின்றனர்.இரு துறையின் மாறுபட்ட கருத்துகளால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 7 மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. துவக்கத்தில் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் புற்றீசல் முளைத்துள்ளன. பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்ற நிலையில் தற்போதைய நடவடிக்கை பாரபட்சத்தையே காட்டுகிறது.
நேற்று தாண்டிக்குடியில் ரோட்டோரம் உள்ள தற்காலிக கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை துரிதம் காட்டியது. கிராமங்களில் காட்டும் ஆக்கிரமிப்பு அகற்றுதலை சுற்றுலா நகரான கொடைக்கானலில் காட்டுவதற்கு நெடுஞ்சாலைதுறை தயக்கம் காட்டுகிறது. மாவட்ட நிர்வாகம் துரிதம் காட்டி சீசனுக்குள் கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றி விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' தாண்டிக்குடியில் மனுதாரர் தொடர் புகார் அளித்ததன் படி ரோட்டோர கடைகள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து நிரந்தர ஆக்கிரமிப்புகளும் அகற்றும் நடவடிக்கையும் தொடரும். கொடைக்கானலை பொருத்தமட்டில் வருவாய் துறை தற்போதுதான் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்துள்ளது. அவற்றை ஆவணங்களின் மூலம் வழங்க கோரி உள்ளோம். இருந்த போதும் இதுவரை வழங்கவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து ஆக்கிரமப்புகளும் கால வரம்பின்றி அகற்றும் பணி நடக்கும்'' என்றார்.