/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் லைன் அறுந்து விழுந்து தீ அணைக்க சென்ற விவசாயி பலி
/
மின் லைன் அறுந்து விழுந்து தீ அணைக்க சென்ற விவசாயி பலி
மின் லைன் அறுந்து விழுந்து தீ அணைக்க சென்ற விவசாயி பலி
மின் லைன் அறுந்து விழுந்து தீ அணைக்க சென்ற விவசாயி பலி
ADDED : மே 21, 2024 06:40 AM
குஜிலியம்பாறை : தோட்டத்தில் மின் லைன் அறுந்து விழுந்து தீ பற்றிய நிலையில் தோட்டத்தில் தான் தீப்பற்றி விட்டதாக கருத வேப்பங் குலையை ஒடித்து அணைக்கச் சென்ற விவசாயி பலியானார்.
ஆலம்பாடி ஊராட்சி கொல்லப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி 65. நேற்று மதியம் தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின் லைன் ஒன்று அறுந்து விழ கோட்டத்தில் தீப்பற்றியது. இதை பார்த்த ராமசாமி வேப்பம் குலைகளை ஒடித்து தீயை அணைக்க முயற்சித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்ட ராமசாமி இறந்தார். இதே பகுதியில் இரு மாதங்களுக்கு முன்பு மின் லைன் அருந்து விழுந்ததில் 4 பசுமாடுகள் இறந்தது குறிப்பிடத் தக்கது.
கொல்லப்பட்டி பகுதியில் சேதமடைந்த மின் லைன்களை முறையாக சரி செய்து சீரான மின் விநியோகம் செயல்பட மாவட்ட மின்துறை நிர்வாகம் முன் வரவேண்டும்.