/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனதொட்டிகளில் தண்ணீரை நிரப்பியது வனத்துறை
/
வனதொட்டிகளில் தண்ணீரை நிரப்பியது வனத்துறை
ADDED : பிப் 22, 2025 05:59 AM

திண்டுக்கல்: தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் சிறுமலையில் தண்ணீர் நிரப்பாமலிருந்த வனவிலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளை வனத்துறை தொடங்கியது .
சிறுமலை, கொடைக்கானல், நத்தம், கன்னிவாடி, அய்யலுார், வேடசந்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது.
இதில் சில மாதங்களாக தண்ணீர் நிரப்பாமல் இருந்ததால் வனவிலங்குகள் அருகிலிருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது.
இதனால் விவசாயிகள் பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வனப்பகுதிகளில் தண்ணீர் நிரப்பாமல் இருக்கும் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வனத்துறை நிர்வாகம் முன்வரவேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக திண்டுக்கல் சிறுமலை ஊராட்சி, வனத்துறை சார்பில் சிறுமலை செல்லும் மலைப்பாதைகளில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தொடங்கியது.
18 கொண்டை ஊசி வளைவு பகுதிகளிலும் தண்ணீர் லாரிகள் மூலம் வனவிலங்குகள் குடிப்பதற்கு ஏதுவாக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பபட்டது.