ADDED : ஜூன் 14, 2024 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி ஆயக்குடி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதி அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகளை விரட்ட வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது
ஆயக்குடி சட்ட பாறை, கோம்பைப்பட்டி மலை அடிவாரப் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. விளை பயிர்களை சேதப்படுத்தப்படுவதோடு 10க்கு மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் ரோடுகளிலும் சுற்றி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஒட்டன்சத்திரம் வனச்சரகத்தை சேர்ந்த 20 பேர் கொண்ட வனக்குழுவினர் யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை முதல் பட்டாசுகளை வெடித்தப்படி யானைகளை விரட்டினர்.