ADDED : ஜூன் 27, 2024 05:07 AM

திண்டுக்கல் : போதைப்பொருள்,சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு சர்வதேச நாளை முன்னிட்டு திண்டுக்கல் ஆர்.வி அறக்கட்டளை, பண்ணை பார்மசி கல்லுாரி, புனித அந்தோணியார் கலை, அறிவியல் கல்லுாரி, போதை ஒழிப்பிற்கான சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து போதைக்கு எதிரான மிகப்பெரிய மனித சங்கலி நிகழ்ச்சி பண்ணை பார்மசி கல்லுாரியில் நடந்தது. மாநகராட்சி மேயர் இளமதி தொடங்கி வைத்தார்.
பண்ணை கல்வி குழும தலைவர் ஆடிட்டர் பண்ணை கார்த்திகேயன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கணேசன் ஒருங்கிணைத்தார். புனித அந்தோணியார் கலை,அறிவியல் கல்லுாரி முதல்வர் பிரமிளா பேசினார். புனித அந்தோணியார் கல்லுாரி துணை முதல்வர் வனிதா போதைக்கு எதிரான உறுதிமொழியை வாசித்தார். ஆர்.வி. அறக்கட்டளை இயக்குனர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஜெயம் மாவட்ட போதை தடுப்பு மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சகிலா ஜேம்ஸ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தார். ஏ.எஸ்.பி.,சிபின் பேசினார். இதை தொடர்ந்து திண்டுக்கல் சோனா டவரிலிருந்து அரசு மருத்துவமனை வரை ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல்லில் மதுவிலக்கு போலீசார் சார்பில்போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆர்.டி.ஓ., கமலக்கண்ணன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்.ஐ., முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.
வடமதுரை: அய்யலுார் சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போலீசார் சார்பில் போதைப் பொருள் விற்பனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் பேசினார்.
ஒட்டன்சத்திரம்: பழநி ஆண்டவர் மகளிர் கலை கல்லுாரி, போலீஸ் துறை, மதர் கேர் குடிபோதை சிகிச்சை மையம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி., முருகேசன் துவக்கி வைத்தார். மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் சவுந்தரராஜன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு தாளாளர் வேம்பணன், கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பு பணிகளை உதவி பேராசிரியைகள் நந்தினி, சத்யஜோதி செய்திருந்தனர்.
வத்தலகுண்டில் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் சிலைமணி துவக்கி வைத்தார். பட்டிவீரன்பட்டியில் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் துவக்கி வைத்தார். எஸ்.ஐ., ராம்சேட், என்.எஸ்.வி.வி பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார், செயலர் நிர்மல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கொடைக்கானல்: கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப் பகுதியில் போலீசார், மாணவர்கள் பங்கேற்ற போதை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி. எஸ்.பி., மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கலந்து கொண்டனர். தாண்டிக்குடி பகுதியில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் எஸ்.ஐ., சேகர், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பழநி: உட்கோட்ட போலீசார் சார்பில் நடந்த ஊர்வலத்தில் பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., தனஜெயன், இன்ஸ்பெக்டர் மணிமாறன், கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ் கலந்து கொண்டனர்.
நத்தம்: - போலீசார் சார்பாக டூவீலர் ஊர்வலம் நடந்தது. இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தொடங்கி வைத்தார். நத்தம் போலீஸ் எஸ்.ஐ., போலீசார் கலந்து கொண்டனர்.