sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடு, தெரு விளக்கு வசதி அறவே இல்லை பரிதவிப்பில் லெக்கையன்கோட்டை ஊராட்சி மக்கள்

/

ரோடு, தெரு விளக்கு வசதி அறவே இல்லை பரிதவிப்பில் லெக்கையன்கோட்டை ஊராட்சி மக்கள்

ரோடு, தெரு விளக்கு வசதி அறவே இல்லை பரிதவிப்பில் லெக்கையன்கோட்டை ஊராட்சி மக்கள்

ரோடு, தெரு விளக்கு வசதி அறவே இல்லை பரிதவிப்பில் லெக்கையன்கோட்டை ஊராட்சி மக்கள்


ADDED : ஆக 22, 2024 03:41 AM

Google News

ADDED : ஆக 22, 2024 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: லெக்கையன்கோட்டை ஊராட்சி விரிவாக்க பகுதிகளில் ரோடு, தெரு விளக்கு என எந்த வசதியும் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

சாலைப் புதுார், குழந்தைவேல்கவுண்டன்புதுார், அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஊராட்சியின் குறுக்கே செல்கிறது. இந்த ஊராட்சி அமைந்துள்ள பகுதியில் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது. இத்துடன் மேம்பாலம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. விடுமுறை , விசேஷ நாட்களில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெளியூர் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். ரயில்வே லைனுக்கு வடக்கு பகுதியில் தோட்டத்துச் சாலைகள் அதிகம் உள்ளன. மழைக்காலத்தில் மழை நீர் தேங்கியதால் சப்வேயை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது சப்வேக்கு கூரை அமைக்கப்பட்டதால் தண்ணீர் தேங்குவதில்லை. இருந்தபோதிலும் நடுப்பகுதி பள்ளமாக இருப்பதால் சிறிதளவு தண்ணீர் தேங்குகிறது. இதனை மேடாக்கினால் தண்ணீர் வெளியேறும் பாதையில் தேங்காமல் சென்று விடும். அரங்கநாதபுரம் பகுதியில் ரோடு சேதமடைந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.

ஊராட்சிப் பகுதிகளில் தேவையான இடங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டங்களும் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சப்வே நடுவில் தேங்கும் மழைநீர்


பெருமாள்சாமி, விவசாயி, லெக்கையன்கோட்டை:ரயில்வே லைனுக்கு வடக்கு பகுதியில் விவசாயிகளின் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. மழைக்காலத்தில் சப்வேயில் தண்ணீர் தேங்கியதால் ரயில்வே லைனுக்கு வடக்கு பகுதிக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது சப்வேயில் கூரை அமைக்கப்பட்டுள்ளதால் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சப்வே நடுப்பகுதி பள்ளமாக இருப்பதால் அங்கு நீர் வெளியேற வழி இன்றி உள்ளது. இப்பகுதியை சற்று மேடாக்கி அருகில் உள்ள தண்ணீர் வெளியேறும் பாதையில் செல்லும்படி வழிவகை செய்ய வேண்டும்.

குடிநீர் பிரச்னை இல்லை


கருப்பணன், கூலி தொழிலாளி, லெக்கையன்கோட்டை காலனி: தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் பிரச்னை இல்லை. தினமும் குப்பையை வாங்கி செல்வதால் குப்பை தேங்குவது இல்லை. தற்போது மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது ரோட்டின் மறுபக்கம் செல்வதற்கு நீண்ட துாரம் நடந்து கடக்க வேண்டி உள்ளது. இதனால் ரோட்டின் வடக்கு பகுதியில் உள்ளவர்கள் ஒட்டன்சத்திரம் செல்வதற்கும், தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் திண்டுக்கல் செல்வதற்கும் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.

தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது


குழந்தைவேல், துணைத்தலைவர்: குழந்தைவேல் கவுண்டன் புதுாரில் மண் ரோடு தார் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சிப் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. சாலைப்புதுாரில் அங்கன்வாடி கட்டடம் புதிய சுற்றுச்சுவருடன் கட்டப்பட்டுள்ளது. சாலைப்புதுார் ,லெக்கையன் கோட்டை பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.லெக்கையன்கோட்டை பகுதியில் ஒரு லட்சம் லிட்டர் தரை மேல் தொட்டியும் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஐந்து இடங்களில் புதிதாக போர் போடப்பட்டுள்ளது. புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.

தேவையான இடங்களில் தெருவிளக்கு


செல்லம்மாள் தண்டபாணி,ஊராட்சித் தலைவர்: அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததின் பயனாக சாலைப்புதுாரில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. அரங்கநாதபுரம் பகுதியில் தார் ரோடு அமைக்கப்படும். விரிவாக்க பகுதிகளில் தேவையான வசதிகள் செய்து தரப்படும். வார்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு உள்ளதால் பொதுக் குழாய் பயன்படுத்தப்படுவதில்லை. காப்பிலியபட்டியில் உரக்கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் டிராக்டர் ,பேட்டரி வண்டிகளில் குப்பையை அள்ளி சென்று கொட்டி வருகிறோம். குப்பைகள் தேங்குவதில்லை. சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் தண்ணீர் ரூ.5 க்கு கொடுக்கப்படுகிறது. விரைவில் தெருவிளக்குகள் அமைக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us