/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழாய் உடைந்து வீணாகிறது தண்ணீர்
/
குழாய் உடைந்து வீணாகிறது தண்ணீர்
ADDED : மே 29, 2024 04:30 AM

மூடி சேதத்தால் பள்ளம்
திண்டுக்கல் ராமநாதபுரம் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளதால் குச்சியை நட்டு வைத்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர் . ஆர்த்தி, திண்டுக்கல்.
வீணாகும் குடிநீர்
புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லுார் அருந்ததியர் காலனியில் பல நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது .இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கி.ரங்கசாமி பொம்மநல்லுார்.
.............-------சேதமான மின் மாற்றி துாண்கள்
வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இருக்கும் மின் மாற்றியின் இருதுாண்களும் சேதமடைந்து கிடக்கிறது. துாண் முறிந்து விபத்து ஏற்படுத்தும் முன் இதை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். . - அழகர்சாமி, வடமதுரை.
.............-------மரக்கிளையால் விபத்து
கொடைக்கானல் உட்வில் ரோட்டில் பாதசாரியில் நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள தனி பாதையில் மரக்கிளை முறிந்து கிடப்பதால நடந்து செல்பவர்கள் சிரமப்படுகின்றனர் .இதை அகற்றி சீரமைக்க வேண்டும் .கோபாலகிருஷ்ணன், கொடைக்கானல்.
............--------திருச்சி ரோட்டில் குப்பை
திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை குவிந்துள்ளது. பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பை குவிந்து சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை அகற்ற நடவடிக்கை வேண்டும். முருகன், திண்டுக்கல்.
...............--------சாக்கடையில் குப்பை
நிலக்கோட்டை காமராஜர் நகர் 8வது வார்டில் சாக்கடையில் குப்பை அடைத்து நீண்ட நாட்களாக அகற்றாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி கொசுக்களும் புழுக்களும் வீட்டிற்குள் நுழைகிறது .சாக்கடை யை துார்வார நடவடிக்கை வேண்டும், சினேகா, நிலக்கோட்டை.
..................---------
சேதமுற்ற ரோடு
நிலக்கோட்டை தாலுகா நக்கம்பட்டியில் இருந்து பொட்டிகுளம் செல்லும் ரோடு சேதமடைந்து மோசமாக உள்ளது .இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர் . இந்த ரோடை விரைந்து சீர் செய்ய வேண்டும் க.ரதிஷ்பாண்டியன் , பொம்மணம்பட்டி.--------.........