/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாத்தியமில்லாததை கூட சாத்தியமாக்கும் வல்லமை நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு
/
சாத்தியமில்லாததை கூட சாத்தியமாக்கும் வல்லமை நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு
சாத்தியமில்லாததை கூட சாத்தியமாக்கும் வல்லமை நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு
சாத்தியமில்லாததை கூட சாத்தியமாக்கும் வல்லமை நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு
ADDED : மார் 02, 2025 05:14 AM

திண்டுக்கல்
இன்றைய நவநாகரிக உலகத்தை கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. சாத்தியமில்லாதவற்றை கூட அறிவியல் துணை கொண்டு சாத்தியமாக்கும் வல்லமை படைத்தவர்கள் பொறியாளர்கள். ஒரு மலையை சல்லி சல்லியாக உடைத்து மண்ணாக மாற்றுவது. அந்த மண்ணை கொண்டு மாபெரும் கட்டடங்களை எழுப்புவது பொறியாளர்கள் தான். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்களும் பொறியாளர்கள் தான்.இத்தகைய பொறியாளர்கள் ஒன்றிணைந்த நிகழ்ச்சியாக தமிழ்நாடு ,புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில எழுச்சி மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.
இதில் பங்கேற்ற நிர்வாகிகள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இதோ...
வேண்டும் பொறியாளர் கவுன்சில்
முத்துகிருஷ்ணன், மாநாட்டுகுழு தலைவர் : தமிழ்நாடு ,புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில எழுச்சி மாநாட்டில் பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டுமென மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் பெரியசாமி, எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன் உள்ளிட்டோரிடம் வலியுறுத்தினோம். பொறியாளர் கவுன்சில் வரைவு அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது.
மாநில முழுவதும் ஒரே பதிவு
விஜயபானு, மாநில தலைவர் : பொறியாளர்கள் ஒரு இடத்தில் பதிவு செய்தால் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பதிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறும், மாநில முழுவதும் ஒரே பதிவு நடைமுறையை ஏற்படுத்திதர வேண்டுமெனவும் அரசிடம் கோரிக்கை வைப்பதோடு தீர்மானமாகவும் நிறைவேற்றி உள்ளோம்.
மாநில திட்டக்குழுவில் பொறியாளர்கள்
டி.எஸ்.பிரபு, மாநில துணைத்தலைவர் : மாநில திட்டக்குழுவில் எங்களது கூட்டமைப்ப சேர்ந்த பொறியாளர்களை இடம்பெற செய்ய வேண்டுமென மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தியுள்ளோம். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் எங்களது கூட்டமைப்பின் சார்பில் 2 உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அத்தியாவசியமான கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கட்டுமானப் பொருட்களை கொண்டு வர வேண்டுமென்பதையும் மாநாட்டின் வாயிலாக வலியுறுத்துகிறோம் என்றார்.
விதிகளை தளர்த்த வலியுறுத்தல்
டேவிட் பிராங்களின், மாநாட்டுக்குழு பொருளாளர் : மனை, மனைப்பிரிவு வரன்முறை அனுமதி வழங்கும் இணையதளம் எப்போதும் செயல்பாட்டில் இருந்து பணம் செலுத்தவும், அனுமதி வழங்கவும் சீராய்வு செய்ய வேண்டுமென பொறியாளர்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளோம். குறிப்பாக ெஹச்.ஏ.சி.ஏ., விதிகளை தளர்த்தி சாதாரண குடியிருப்பு கட்டடம் 300 சதுரமீட்டர் வரை கட்டுவதற்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கட்டட அனுமதி வழங்க வேண்டுமென பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதையும் தீர்மானமாக முன்மொழிந்துள்ளோம்.
கட்டணங்களை மறுசீராய்வு செய்யுங்க
பாஸ்கரன், மாநில செயலர் : சிறுதொழில் , குறுந்தொழில்கள் செய்யும் தொழிற்சாலைகள் 750 சதுரமீட்டர் வரை உள்ள நிறுவனங்களுக்கு கட்டட அனுமதி அந்தந்த உள்ளூர் அமைப்புகளில் வழங்கினால் தொழில்துறை வளர்ச்சியடையும் என்பதை அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில் தீர்மானமாக மாநாட்டில் கொண்டு வந்துள்ளோம். ஒற்றைச்சாளர ,சுயசான்று நடைமுறையில் கட்டணம் அதிகமாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு அப்ரூவலுக்கு வருவோரின் எண்ணிக்கையும் குறைகிறது. எனவே, கட்டணங்களை மறுசீராய்வு செய்ய மாநாடு வாயிலாக கேட்டுள்ளோம்.