/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரிவாள் மீது ஏறி நின்று பூஜாரி அருள் வாக்கு
/
அரிவாள் மீது ஏறி நின்று பூஜாரி அருள் வாக்கு
ADDED : மார் 02, 2025 05:05 AM

வேடசந்துார்: திண்டுக்கல்மாவட்டம் வேடசந்துார் மதுரைவீரன் கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு கோயில் பூஜாரி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.
வேடசந்துார் கடைவீதி மதுரைவீரன் கோயில் தெருவில் மதுரை வீரன், பாலமுருகன், காமாட்சியம்மன், பகவதியம்மன் கோயில்கள் உள்ளன. இங்கு அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு சுவாமிக்கு சேவல் , பூரி , முட்டையுடன் படையல் படைத்தனர்.
அப்போது அருள் வந்த கோயில் பூஜாரி தங்கவேல் 65, அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு குடும்ப நலன், தொழில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அருள் வாக்கு கூறினார்.
திண்டுக்கல், மதுரை, பழநி, கரூர், தாராபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, தில்லை சந்திரன், கிருஷ்ணன், சிவசங்கரன், பாலு, முனியப்பன் செய்தனர்.