ADDED : மே 05, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : ஒட்டன்சத்திரம் ரோடு கால்நடை மருத்துவமனை முன் வசிப்பவர் விவசாயி கார்த்தி 35. இவரும் மனைவியும் தோட்டத்திற்கு சென்ற நிலையில், அத்தை மலர்விழி வீட்டில் இருந்துள்ளார்.
இவரும் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று பேசிவிட்டு வந்துள்ளார். அப்போது அடைகாக்க வைக்கப்பட்டிருந்த கூடையில் அடைக்கோழியை விரட்டி விட்டு, 6 அடி நீளம் சாரைப்பாம்பு முட்டைகளை விழுங்கி நகர முடியாமல் படுத்து இருந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் பாம்பை பிடித்து சென்றனர்.