/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லை குளிர்வித்த கோடை மழை
/
திண்டுக்கல்லை குளிர்வித்த கோடை மழை
ADDED : மே 06, 2024 12:57 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல்லைப் பொறுத்தவரையில் மார்ச் துவக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
பெரும் பெரும்பாலான மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கினர். பகலில் கொளுத்தும் வெயில் இரவில் உஷ்ணமாக மாறி வீட்டிற்குள் புழுக்கத்தை ஏற்படுத்துவதால் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர்.
கோடை மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்த நிலையில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்து. மாலை 3:30 மணிக்கு மேல் லேசான மேகமூட்டம் காணப்பட்டது.
3:45 மணிக்கு மேல் பெய்த மழை விடாத கனமழையாக இடி, மின்னலுடன் பெய்தது. திருச்சி ரோடு, கடைவீதி உள்ளிட்ட சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் பாதியளவு இடிந்து விழுந்தது.