/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புத்துாரில் பீதியை கிளப்பிய டூவீலர்
/
புத்துாரில் பீதியை கிளப்பிய டூவீலர்
ADDED : ஆக 23, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: புத்துார் கரிவாடன்செட்டிபட்டி பண்ணமலை அடிவாரத்தில் போலீசாரின் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் உள்ளது. இப்பகுதி புதருக்குள் டூவீலர் நின்றிருந்தது.
மக்களிடையே பீதியை ஏற்படுத்த வனத்துறையினர், போலீசார், கிராமத்தினர் ஒருங்கிணைந்து மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். மலையின் மேல் வாலிபர் ஒருவர் சோர்வடைந்த நிலையில் படுத்திருப்பதை கண்டனர்.
விசாரணையில் கொம்பேறிபட்டி பகுதி வாலிபர் வீட்டில் ஏற்பட்ட மன வருத்தத்தில் அதிகளவு துாக்க மாத்திரைகளை சாப்பிட்டிருந்தது தெரிந்தது.
அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க அப்பகுதியில் ஏற்பட்ட பீதி முடிவுக்கு வந்தது.

