/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னாளபட்டி கருமாரியம்மன் கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
/
சின்னாளபட்டி கருமாரியம்மன் கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
சின்னாளபட்டி கருமாரியம்மன் கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
சின்னாளபட்டி கருமாரியம்மன் கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : மார் 08, 2025 06:17 AM

சின்னாளபட்டி : சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
சின்னாளபட்டியில் அம்பாத்துறை ரோடு குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயில் மாசி திருவிழா பிப். 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு தினமும் அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது.
நேற்று சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து நேற்று சிறுமலையில் உள்ள அசலைக்கு சென்று சிரஞ்சீவி தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.