/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பேரூராட்சிகளில் இல்லை பஸ் ஸ்டாண்ட்; அரசு அலட்சியத்தால் அல்லாடும் மக்கள்
/
பேரூராட்சிகளில் இல்லை பஸ் ஸ்டாண்ட்; அரசு அலட்சியத்தால் அல்லாடும் மக்கள்
பேரூராட்சிகளில் இல்லை பஸ் ஸ்டாண்ட்; அரசு அலட்சியத்தால் அல்லாடும் மக்கள்
பேரூராட்சிகளில் இல்லை பஸ் ஸ்டாண்ட்; அரசு அலட்சியத்தால் அல்லாடும் மக்கள்
ADDED : மார் 08, 2025 06:23 AM

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்ற கூற்று இனி நகரங்களில் வாழுகிறது என மாறும் நிலை உள்ளது. 21ம் நுாற்றாண்டு இந்தியாவின் நகர மயமாதல் நுாற்றாண்டாக அமையும். நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் நகர்புற பகுதிகளின் பங்களிப்பு முக்கியம். நகர்பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும், மக்களுக்கு தரமான சேவைகளை வழங்குவதும் நகர்புற உள்ளாட்சிகளின் முக்கிய கடமையாகும்.
ஆனால் தற்போது நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் இதன் தாக்கத்தையும், அவசியத்தையும் உணர்ந்து செயல்படவில்லை. பேரூராட்சி போன்ற சிறு நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு வாழும் இளைஞர்கள் மீண்டும் கிராமம் போன்று வாழ முடியாமலும், முற்றிலும் நகர மயமாகிவிட முடியாமலும் தவிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக மாவட்டத்தில் பல பேரூராட்சிகளில் பஸ் ஸ்டாண்ட் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதற்காக 13 ஆண்டுகளுக்கு முன்னர் பேரூராட்சிகளுக்கு அதன் இயக்குனரகம் அனுப்பிய சுற்றிக்கையில், 'பஸ் ஸ்டாண்ட் இல்லாத பேரூராட்சிகளில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க முயற்சிகளை செய்ய வேண்டும்.
நிலத்தை கையகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நன்கு பரிசீலனை செய்ய வேண்டும். கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு தேவைப்படும் தொகை விபரம், கையகப்படுத்திய பின்னர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க தேவைப்படும் கடன் விபரம், தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் வகைப்பாடு தொகுப்பினையும் அனுப்ப வேண்டும்' என அறிவுறுத்தியிருந்தது. ஆனாலும் இதுவிஷயத்தில் முன்னேற்றமான நடவடிக்கை இல்லாததால் பெரும்பாலான பேரூராட்சிகளில் பஸ் ஸ்டாண்ட் அமையாமல் அப்படியே உள்ளது. இங்கு மக்களின் அவதியும் தொடர்கதை போல் நீடிக்கிறது.