/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏரிச்சாலையில் இல்லை கழிப்பறை முகம் சுளிக்கும் சுற்றுலா பயணிகள்
/
ஏரிச்சாலையில் இல்லை கழிப்பறை முகம் சுளிக்கும் சுற்றுலா பயணிகள்
ஏரிச்சாலையில் இல்லை கழிப்பறை முகம் சுளிக்கும் சுற்றுலா பயணிகள்
ஏரிச்சாலையில் இல்லை கழிப்பறை முகம் சுளிக்கும் சுற்றுலா பயணிகள்
ADDED : ஏப் 16, 2024 06:52 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் அண்ணா பூங்கா பகுதியில் உள்ள கழிப்பறை பயனற்றுள்ளதால் திறந்தவெளியை நாடும் நிலையால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் அவல நிலை தொடர்கிறது.
கொடைக்கானல் சுற்றுலாத்தலத்தின் இருதயமாக உள்ளது ஏரிச்சலை. இப்பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா படகு குழாம், பிரையன்ட் பூங்கா, அண்ணா பூங்கா உள்ளன.
இப்பகுதியில் நகராட்சி சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் மின்னணு கழிப்பறையை வசதியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நகரில் பத்துக்கு மேற்பட்ட இடத்தில் இந்த கழிப்பறைகளை அமைத்தது. சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் பின் செயல்படவில்லை.இதையடுத்து பிரையன்ட் பூங்கா, படகு குழாமிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கழிப்பறை வசதியின்றி திறந்தவெளியை நாடும் அவலம் உள்ளது.
இதில் பெண்களின் நிலை கவலைக்குரியதாக மாற முகம் சுளிக்கின்றனர். கழிப்பறை வசதிக்காக அருகிலுள்ள பிரையன்ட் பூங்காவில் ரூ.30 டிக்கெட் எடுத்து அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தும் அவலம் உள்ளது. ஏராளமான பயணிகள் பூங்கா கழிப்பறையை பயன்படுத்துவதால் விரைவில் நிறைந்து அதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் பயணிகள் அவதிப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
சுப்பிரமணி, டிரைவர் : சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலில் அடிப்படை கட்டமைப்பு அறவே இல்லாத நிலை உள்ளது. அண்ணா பூங்கா ஏரி சாலை பகுதிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை வசதி அறவே இல்லாத நிலையில் பயணிகள் செய்வதறியாது தவிக்கும் நிலை உள்ளது.
அருகில் உள்ள பிரையன்ட் பூங்காவில் ரூ. 30 கொடுத்து கழிப்பறைக்கு செல்லும் அவலம் உள்ளது. ஏரி சாலை பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் உள்ளது. இதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
சத்தியநாதன், கமிஷனர், கொடைக்கானல் : அண்ணா பூங்கா பகுதியில் புதிய கழிப்பறை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் இப்பணிகளை செய்வதில் சிக்கல் உள்ளது. இருந்த போதும் தற்போது சீசன் துவங்க உள்ளதால் தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

