/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சலேத் மாதா சர்ச் விழாவில் தேர்பவனி
/
சலேத் மாதா சர்ச் விழாவில் தேர்பவனி
ADDED : மே 24, 2024 03:40 AM

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு மறவபட்டிபுதுார சலேத் மாதா சர்ச் திருவிழா தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் முட்டிபோட்டப்படி மெழுகுவர்த்தி ஏந்தி தேரை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தாடிக்கொம்பு மறவபட்டிபுதுார் சலேத் மாதா சர்ச் 139 வது ஆண்டு திருவிழா மே 12 மாலை நவநாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தினமும் மாலை புனித சலேத் மாதாவின் உருவம் தாங்கிய கொடி,மாதா மின் ரதத்துடன் ஜெபமாலை ஊர்வலம் நடக்க நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து மே 20ல் மாதா திரு உருவம் தாங்கிய கொடியுடன் ஜெபமாலை ஊர்வலம் நடக்க கொடியேற்றம் நடந்தது. மே 21 இரவு சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் வைக்கப்பட்ட மின் ரத ஊர்வலம் வான வேடிக்கையுடன் நடந்தது. மே 22 ல் நடந்த பெருவிழாவில் புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் வீற்றிருக்க தேர் பவனி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் முட்டிப்போட்டப்படி கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி தேரை சுற்றி வந்தப்படி நேர்த்தி கடன் செலுத்தினர்.