/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புல்லட் மட்டும் திருடும் பலே திருடர்கள் சிக்கினர்
/
புல்லட் மட்டும் திருடும் பலே திருடர்கள் சிக்கினர்
ADDED : மார் 03, 2025 06:49 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக புல்லட் திருடு போவதாக மேற்கு, நகர், வடக்கு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் வந்தன.
விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டது, கரூர் ராயனுாரைச் சேர்ந்த ஹரிஹரன், 23, கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பிரசாந்த், 19, என்பது தெரிந்தது. போலீசார் நேற்று கரூர் சென்று இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து எட்டு புல்லட் உட்பட 10 டூ - வீலர்களை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டூ - வீலர் திருட்டு வழக்குகள் இருப்பதும், இருவரும் புல்லட்டை மட்டும் குறிவைத்து திருடுவதும் விசாரணையில் தெரிந்தது.