/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புல்லட்களை மட்டும் திருடும் பலே திருடர்கள் கைது
/
புல்லட்களை மட்டும் திருடும் பலே திருடர்கள் கைது
ADDED : மார் 03, 2025 04:53 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் புல்லட் டூவீலர்களை மட்டும் திருடிய இருவரை போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து 9 புல்லட் உட்பட 11 டூவீலர்களை மீட்டனர்.
திண்டுக்கல் நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக புல்லட் டூவீலர் மட்டும் திருடுபோவதாக மேற்கு, நகர், வடக்கு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் வந்தது. எஸ்.பி.,பிரதீப் உத்தரவில்இன்ஸ்பெக்டர் வினோதா, எஸ்.ஐ.,மலைச்சாமி,நகர் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,வீரபாண்டி தலைமையிலான போலீசார் நகர் முழுவதும் உள்ள சி.சி.டி.வி.,காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் புல்லட் டூவீலர்களை மட்டும் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த வாலிபர்கள் பயன்படுத்திய அலைபேசி எண்களை வைத்து போலீசார் பின் தொடர்ந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது கரூர் ராயனுாரை சேர்ந்த ஹரிஹரன்23, கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த பிரசாந்த்19, என்பதும் தெரிந்தது. போலீசார் நேற்று கரூர் சென்று இருவரையும் கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 9 புல்லட் டூவீலர்கள் உட்பட 11 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டூவீலர் திருட்டு வழக்குகள் இருப்பதும் இருவரும் புல்லட் டூவீலர்களை மட்டும் குறிவைத்து திருடுவதும் விசாரணையில் தெரிந்தது.